Pages

Showing posts with label தகவல்கள். Show all posts
Showing posts with label தகவல்கள். Show all posts

Wednesday, 9 February 2011

மானமுள்ள தமிழன்...

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி
விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்டங்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.

கடந்த 23-ம் தேதி கொத்தமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை மாவட்ட தி.மு..செயலாளர் பெரியண்ண அரசு தலைமையில் இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கும் விழா நடந்து கொண்டிருந்தது.அப்போது பயனாளிகள் பட்டியலில் இருந்து விஜயகுமார் என்ற பெயர் வாசிக்கப்பட்டதும்,கொத்தமங்கலம் மணவாளன் தெருவைச் சேர்ந்த விஜயகுமார் என்ற விவசாயி மேடையேறினார்.

அவருக்கு வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியை வாங்கிக் கொண்டார்.ஒரு விநாடி அங்கே நின்றவர்,டி.வி.யை பெரியண்ண அரசுவிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு,கூடவே ஒரு மனுவையும் கொடுத்தார்.ஏதோ கோரிக்கை மனு கொடுக்கிறார் என்று அரசுவும் சாதாரணமாக வாங்கிப் படித்தார்.

அதில்மனிதனுக்கு டி.வி. என்பது பொழுதுபோக்கு சாதனம்தான். ஆனால் அதைவிட முக்கியமானது உணவு, உடை, உறைவிடம். தமிழகத்தில் மொத்தம் 88 துறைகள் இருக்கின்றன. இவை தன்னிறைவு அடைந்து விட்டனவா? குறிப்பாக, விவசாயிகளைப் பாதிக்கும் மின்சாரத்துறை தன்னிறைவு அடைந்து விட்டதா?

துறைகள் எல்லாம் தன்னிறைவு அடைந்த பிறகு மிதமிஞ்சிய பணத்தில் இந்த டி.வி.யை வழங்கியிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். இதற்கு மட்டும் எங்கிருந்து நிதி வந்தது?இந்தியாவின் முதுகெலும்பான விவசாயிகள் தமிழகத்தில் அதிகம் வசிக்கிறார்கள். டி.வி. வழங்கும் பணத்தை வைத்து விவசாயிகளுக்குத் தேவையான மின்சாரத்தைக் கொடுத்திருக்கலாம்.

தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டத்தைக் கண்டறிந்து போதுமான மின்சாரத்தை தடையின்றிக் கொடுத்து அந்த ஒரு மாவட்டத்தையாவது தன்னிறைவு

அடையச் செய்திருக்கலாம். இலவசம் என்பது எங்களுக்கு வேண்டாம். தரமான மருத்துவம், கல்வி, மும்முனை மின்சாரம் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கினாலே போதும்.
  
அதை வைத்து நாங்களே சம்பாதித்து டி.வி.முதல் கார் வரை அனைத்தையும் வாங்கிக் கொள்வோம். எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்களே பூர்த்தி செய்து தன்னிறைவு அடைந்து விடுவோம்.

விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, குடிநீர் பற்றாக்குறை, லஞ்சம்,ஊழல் என்று ஆயிரக்கணக்கான குறைகள் இருக்கும்போது ஒரு நடமாடும் பிணமாக நான் எப்படி டி.வி. பார்க்க முடியும்? எனவே எனக்கு இந்த டி.வி. வேண்டாம்.

முதல்வர் கருணாநிதி மீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும், அன்பும் உள்ளது. எனவே,இந்த டி.வி.யை அவருக்கே அன்பளிப்பாகக் கொடுக்க இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.அவர் இதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என் மனம் மேலும் வேதனைப்படும். அரசு மற்றும் அதிகாரிகள் தங்கள் கடமைகளை சரியாகச் செய்தாலே போதும். இந்தியா வல்லரசாகிவிடும்என்று நீண்டது அந்த மனு.

இதைப் படித்த பெரியண்ண அரசு முகத்தில் ஈயாடவில்லை.அருகில் இருந்த
அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். என்றாலும் அந்த மனுவையும் டி.வி.யையும் வாங்கி வைத்துக் கொண்டு மேலும் பரபரப்பை உண்டாக்காமல் விஜயகுமாரை அனுப்பி வைத்தார் அரசு.

இதன் பின்னர் விஜயகுமாரிடம் பேசினோம்.
 “நான் ஒரு சாதாரண விவசாயி. விவசாயிகள் எல்லாம் மின்வெட்டால்
 பாதிக்கப்பட்டு விளைநிலத்தை ரியல் எஸ்டேட்காரன்கிட்ட வித்துட்டு நகரத்துல போய் கூலி வேலைக்கும்,ஹோட்டல் வேலைக்கும் அல்லாடிக்கிட்டிருக்கான். இந்த நிலை, நாளைக்கு எனக்கும் என் பிள்ளைகளுக்கும் வரப் போகிறது. எதிர்காலத்தை நினைத்து மனம் கலங்கிப் போய் இருக்கிறது. ராத்திரியில படுத்தால் தூக்கம் வர மாட்டேங்குது.


 சாராயத்தை குடிச்சுட்டு, ஒரு ரூபாய் அரிசியை தின்னுட்டு உழைக்கும்
 வர்க்கம் சோம்பேறியாகிக்கிட்டிருக்கு.ரொம்ப சீப்பா கணக்குப் போட்டாலும் ஒரு டி.வி. ஆயிரம் ரூபாய்னு வச்சிக்குங்க. தமிழ்நாட்டில் ரெண்டு கோடி
குடும்ப அட்டைகள் இருக்கு.2கோடி குடும்ப அட்டைக்கும் டி.வி. கொடுத்தால்
இருபது லட்சம் கோடி செலவாகும்.இதை வைத்து 88 துறைகளையும் தன்னிறைவு அடையச் செய்தாலே போதுமே.

கனத்த இதயத்தோடும், வாடிய வயிறோடும் இருக்குறவனுக்கு எதுக்கு டி.வி.?  அவன் பொழப்பே சிரிப்பா சிரிக்கும்போது அவன் டி.வி. பாத்து வேற
சிரிக்கணுமாக்கும்.அதுனாலதான் நான் டி.வி.யை திருப்பிக் கொடுத்தேன்’’
என்றார்.

டி.வி.யை திருப்பிக் கொடுத்த கையோடு முதல்வர் கருணாநிதிக்கு கடிதம்
ஒன்றையும் எழுதியிருக்கிறார் விஜயகுமார்.

அந்தக் கடிதத்தில்கொத்தமங்கலத்துக்கு வந்த டி.வி.க்கள் 2519. அதில்
2518 மட்டும்தான் வழங்கப்பட வேண்டும். எனக்கான ஒரு டி.வி.யை எனது அன்புப் பரிசாக நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்என்று குறிப்பிட்டு அதை ஃபேக்ஸ் செய்துள்ளார்.

 மக்களிடம் இருந்து சுரண்டப்படும் பணத்தில் மக்களுக்கே கொடுக்கப்படும்
 லஞ்சம் தான் இலவசங்கள் என்பதை விவசாயி விஜயகுமார் பொட்டில் அடித்தாற்போல் தெளிவுபடுத்தியுள்ளார். மக்களை சோம்பேறிகளாக்கும் இலவசத்துக்கு எதிராக போர் தொடுத்திருக்கும் அவரை பாராட்டத்தான் வார்த்தைகளே கிடைக்கவில்லை...!

(குறிப்பு : இச்செய்தி மின்னஞ்சலில் எனக்கு வந்தது )

Tuesday, 3 November 2009

தெரிந்து கொள்ளவும் : என்ன வைட்டமின் குறைந்தால் என்ன நோய்வரும்

வைட்டமின் A:
இது, குறைந்தால் கண் பார்வை மங்கும். நோயெதிர்ப்பு சக்தி குறையும்.கருப்பையில் கரு வளர்வதற்கும் பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம்.

முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு,ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் A அதிகம்.

வைட்டமின் B:

 இது குறைந்தால் வயிற்று மந்தமும் அஜீரணமும் ரத்த சோகையும் ஏற்படலாம்.பக்கவாதமும் இதய பாதிப்பும் ஏற்பட சாத்தியக் கூறுகள் அதிகம். வாயில் புண் உண்டாகும்.

கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகளில் வைட்டமின் B உண்டு.

வைட்டமின் C :

 இது குறைந்தவர்கள் மனஅமைதி இழப்பர். சிடுமூஞ்சியாக இருப்பர். எலும்புகள் பலம் குறையக்கூடும். பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும்.

ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக்காய்கறிகள், நெல்லிக்காய்,எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளை,வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் C வைட்டமின் அதிகம்.



வைட்டமின் D :

வைட்டமின் ‘D’ இல்லாவிட்டால், எலும்புகள் வலுவிழந்துவிடும். பற்கள் கெடக்கூடும். வைட்டமின் ‘D’ போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில்போல் வளைந்துவிடும். வயிறு ஊதும்.



போதுமான சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் அதன் உடலே வைட்டமின் ‘D தயாரித்துவிடும். முட்டை, மீன், வெண்ணெய், ஆகியவற்றிலும் D வைட்டமின் உள்ளது.



வைட்டமின் E :

இது குறைந்தால் தசைகள் பலவீனமடையும். E வைட்டமின் இல்லாவிட்டால் மலட்டுத்தன்மையை உண்டாக்கும்.

கோதுமை, கீரை, பச்சைக்காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்டமின் எ கிடைக்கும்.


புரோட்டீன் எளிதில் கிடைக்கும் உணவுகள்:

1. பால் : ஜீரணமானவுடன் புரோட்டீன் எளிதில் கிடைத்துவிடும்.

2. சோயா : உடல் வளர்ச்சிக்கும் தசைச் செல்கள் பெருகவும் முழுமையான அளவு புரோட்டீன் இதில்தான் உள்ளது.

3. தானியங்கள் : எளிதில் கிடைக்கக் கூடிய உயர் ரக புரோட்டீன் இவற்றில் உள்ளன.

4. காளான் : அமினோ அமிலம் அதிகம் உள்ளது. உடலுக்கு மிக நல்ல புரோட்டீனைத் தரக் கூடியது. (அலர்ஜி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.)

5. நிலக்கடலை : நல்ல புரோட்டீன், உள்ளது. ஆனால் கொழுப்பு அதிகம் உள்ளது. அளவாகப் பயன்படுத்தல் வேண்டும்.



வைட்டமின்கள்

1.மீன், மீன்எண்ணெய்: வைட்டமின் A,D கிடைக்கும். கருவரை, குழந்தை வளர, எலும்பு வளர பல் உறுதிபட.

2. முட்டை : A,B,D வைட்டமின்கள் கிடைக்கும். எலும்பு, பற்கள் உறுதியாக, குழந்தை வளர.

3. கீரை : E வைட்டமின் அதிகம் தசைகளை பலமாக்க, மலட்டுத் தன்மையை நீக்க, அமினோ அமிலம் பெற.

4. முட்டைக் கோஸ்: A,B,E வைட்டமின் உள்ளன. கண் பார்வை கூடும். வாய்ப் புண், குடல் புண் சீராகும்.


5. ஆரஞ்சு, திராட்சை: C வைட்டமின் அதிகம். எலும்பு, பல் ஈறு பலம் பெரும்

Sunday, 1 November 2009

தீவிரவாத வியாபாரம், முதலீடு மற்றும் லாபங்கள்

பொருளாதார பயங்கரவாதம், தீவிரவாதிகளின் நிதிநிலை: இன்று பொருளாதார
பயங்கரவாதமும், தீவிரவாதிகளின் நிதிநிலை அறிக்கைகளும் சேர்ந்தே
செயல்படுகின்றன. அதற்கு அரசியல்வாதிகளும் ஒத்து போகின்றார்கள். இத்தகைய
புனிதமற்ற கூட்டுக் கொள்ளையில் அப்பாவி சாதாரணமான குடிமக்களின்
கஷ்டப்பட்டு சம்பாத்தித்த பணம் கொள்ளை போகிறது. அதிலும் மத்திய வர்க்க
குடும்பத்தினர் மற்றும் ஓய்வு பெற்றவர்களின் துன்பம் சொல்லி மாளாது. தமது
பிள்ளைப் படிப்பு / பெண்ணின் திருமணம் என்று வைத்திருக்கும் பணத்தைப்
போடு நஷ்டமாகி துன்பத்தை அனுபவித்தவர்கள் ஏராளம். இருப்பினும் அரசு
மெத்தனமாகவே செயல்படுவது பல கேள்விகளை எழுப்புகின்றன.

தீவிரவாத வியாபாரம், முதலீடு மற்றும் லாபங்கள்: தீவிரவாத இயக்கங்கள்
குறிப்பிட்ட மதங்கள், மொழிகள் பேசும் மக்கள், முதலியவர்களை மூலை சலவை
செய்து, அவர்கள் தாம் “புனித போரில்” ஈடுபட்டு தம் மக்களைக்
காப்பாற்றுவதற்கு உயிர்த்தியாகம் செய்கின்றனர், மடிகின்றனர். அவதி
படுகின்றனர் என்றெல்லாம் ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் செய்து, தமது
கட்டுக்குள் வைத்திருக்கும்போது, பணத்தைப் பற்றி கவலையே இல்லை. எப்படி
கடவுளுக்குக் காணிக்கைச் செல்லுத்தப் படுகிறதோ, அதுமாதிரி, பணம்
தீவிரவாதிகளுக்குக் குவிகின்றது.
தீவிரவாத வியாபாரத்தின் பரிணாமக்கள்: மேலும் அவர்கள் போதை மருந்து
கடத்தல் / வியாபாரம், ஆயுத கடத்தல் / வியாபாரம், தொழிற்சாலகளை மிரட்ட்டி
பணம் பறித்தல், தீவிரவாத பயிர்ச்சி முகாம் நடத்துதல், அனைத்துலக
விபச்சாரம், பழங்கால சிலைகள் / சிற்பங்கள் கடத்துதல் முதலிய பல
காரியங்களைத் தொடர்ந்து செய்து வருவதால் அந்தந்த தூரைகளைச் சார்ந்த பலர்
சம்பந்தப் பட்டுள்ளனர். ஏனெனில் அத்தகைய காரியங்களைச் செய்ய அவர்கள்
சுமுகமாக ஒத்துழைக்கவேண்டும், ஆவணங்களை உருவாக்கித் தர வேண்டும், தாம்
குறிப்பிட்ட மனிதர்கள் சென்றுவர அனுமதி அளிக்க வேண்டும். எனவே மாநில
மத்திய அரசாங்க மந்திரிகள் (உடனடியாக மறுத்தல், காலம் கடத்துகள்),
அதிகாரிகள் (சுங்கம், உள்துறை, போலிஸ், உளவுத்துறை), அரசியல்வாதிகள்
(இதில் ஆளும் கட்சி / எதிர் கட்சி பாரபட்வம் இல்லை), சினிமாத் துறையினர்
(தயாரிப்பாளர்கள், நடிகைகள் முதலியோர்).

சிதம்பரம் மாபெரும் பொய்யர்: சிதம்பரம் நிச்சயமாக மிகப்பெரிய பொய்யர்,
ஏனெனில், முன்பு தீவிரவாதிகளின் முதலீடு இந்திய பங்கு சந்தையில் இல்லவே
இல்லை என்று ஒரு போடு போட்டார். ஆனால், மறு தினமே அதற்கு மாறாக செய்திகள்
வந்ததும், ஏதோ இரண்டு கம்பெனிகளின் மீது ஏற்கெனவே நடவடிக்கை எடுத்து
விட்டதாக தமக்கே உரிய “அரசுத்தரமான” பதிலை கொடுத்து மானத்தை இழந்தார்.
இப்பொழுது உள்-துறை அமைச்சாரகவும் பல செயல்களை செய்து மறைக்கிறார்.
மாவோயிஸ்டுகளுடன் உடன்பாடு கொண்டு, ஒரு போலீஸ் அதிகாரியை மீட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தீர்மானம் 1373: ஐக்கிய நாடுகள்
பாதுகாப்பு சபை தீர்மானம் 1373 படி எந்த நாடும் மற்ற நாடு / நாடுகளால்
தீவிரவாதிகளின் பணம் உள்ளது, அப்பணம் தீவிரவாத செயல்களுக்கு உபயோகப்
படுத்தப் படும் என்றால் / தகவல் அளித்தால் / புகார் கொடுத்தால், உடனே
அறிவிக்கப் பட்ட நாடு உடனடி நடவடிக்கை எடுத்து அந்த தீவிரவாத
இயக்கங்களின் வங்கி கணக்குகள், முதலீடுகள் அனைத்தையும் முடக்கவேண்டும்.
ஆனால், நம் நாட்டிலேயோ, அதிலும் “செக்யூலரிஸம்” வந்து விடுகிறது. ஆகவே
தெரிந்தும், வேறு பெயர்களில் உள்ள தீவிரவாத கணக்குகளைக் கண்டு
கொள்வதில்லை. இந்த “செக்யூலரிஸ தீவிரவாதம்” தான் பல அப்பாவி மக்களின்
உயிகளைக் குடித்துள்ளது. பல நூறாயிரம் கோடி சொத்துகள் நாசமாகி
இருக்கின்ன. மேலும் பல கோடி வியாபாரம் சீர்கெட்டுள்ளது.

அமெரிக்க எச்சரிக்கை, இந்தியாவின் மெத்தனம்: அமெரிக்கா தனது தீவிரவாத
அறிக்கையில், ஏற்கெனவே எந்தெந்த தடை செய்யப் பட்டுள்ள அமைப்புகள் எப்படி
இந்தியாவில் மாற்று பெயர்களில் இயங்கி வருகின்றன, என்ற விவரங்களைக்
கொடுத்து எச்சரித்து உள்ளது. இருப்பினும் மாறி-மாறி தேர்தல்களை வைத்து
கொண்டு ஆட்சி-அதிகாரத்தைப் பிடிக்க அலையும் க்சங்கிரஸ் அரசு அதைப் பற்றி
கவலைப் படுவதில்லை. பிரச்சினை வரும் போது அறிக்கைகள் விட்டுக் கொண்டு
காலத்தை ஓட்டுகின்றனர். ஒருவேளை, காங்கிரஸ், திராவிட கட்சிகளுடன் கூட்டு
வைத்துக் கொண்டதில் இந்த வித்தஒயை நன்றாகக் கற்றுக் கொணது போலும்.

பங்குகளில் முதலீடு: இப்பொழுது, அமெரிக்காவைச் சேர்ந்த பல தீவிரவாத
அமைப்புகள் இந்திய பங்குச் சந்தையில் மறைமுகமாக முதலீடு செய்திருப்பதாக
இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை மையம் (செபி) எச்சரித்துள்ளது.
இதுவே பழைய செய்திதான். இதுபோன்ற முதலீட்டாளர்கள் குறித்து தங்களுக்குத்
தெரிந்த தகவல்களை உடனடியாக தெரிவிக்குமாறு நாட்டில் உள்ள அனைத்து பங்கு
பரிவர்த்தனை மையங்களுக்கும் செபி அறிவுறுத்தியுள்ளது. மேலும் சில
தீவிரவாத அமைப்புகள், அதன் தலைமைகள் குறித்த தகவல்களையும் அனைத்து
மையங்களுக்கும் செபி அனுப்பியுள்ளது. "குறிப்பிட்ட எந்த
வாடிக்கையாளராவது, நாங்கள் அனுப்பியுள்ள தகவல்களுடன் ஒத்துப் போவது தெரிய
வந்தால் 24 மணிநேரத்துக்குள் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல்
தெரிவிக்க வேண்டும்..." என்று அந்த எச்சரிக்கைக் குறிப்பில்
கூறப்பட்டுள்ளது.

ஊடகங்களின் ஊக்குவிப்பு, மக்களின் இழப்பு: சமீப காலத்தில் தமிழ்
செனல்களில் “பங்கு வர்த்த்ஹகத்தை”ப் பற்றி அதிகமாகவே நிகழ்ச்சிகள்
ஒளிபரப்பப் படுகின்றன. ஒருசிலரைத் தவிர, பெரும்பாலோர் ஏதோ வானிலை அறிக்கை
அல்லது சோதிடம் மாதிரி, இருக்கின்ற எல்லாம் சாதக-பாதஜங்களைக்
குறிப்பிட்டு குழப்புகிறார்களேத் தவிர தெளிவாக, குறிப்பாக எதையும்
சொல்வதில்லை. இருப்பினும் அத்தகைய வலுக்கட்டாஅயமான பிரச்சாரத்தில்
தெரிவது, பொது மக்களை பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்யுங்கள் என்ற
அறிவுரைதான். இதனால், விஷயம் அறியாதவர்கள் எல்லாம், தங்களது பணத்தை இதில்
கொட்டுகின்றனர். ஆனால், லாபமடைவது, மறைமுகமாக தீவிரவாதிகளே.

பணம் கொடுப்பது யார்? சர்வதேச பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும்
தீவிரவாதிகள் பட்டியலில் தாவூத் இப்ராகிம், எல்.டி.டி.ஈ, அல்-குவைதா,
உல்ஃபா, சிமி, ஜெய்சி-முஹமது மாற்றும் பல பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகத்
தெரிகிறது. தாலிபானிற்கு பணம் கொடுப்பது சௌதி அரேபியா, பாகிஸ்தான், இரான்
மற்றும் பாரசிக வளைகுடா நாடுகளின் குறிப்பிட்ட மக்களே. $ 106 மில்லியன்
(ரூ. 5300 கோடிகள்) தாலிபானிற்கு 2008ல் ககதைத்துள்ளது! அதேமாதிரி,
எல்.டி.டி.ஈக்கு பணம் கொடுப்பது கனடா, அமெரிக்கா முதலிய நாடுகளில் உள்ள
குறிப்பிட்ட நபர்களே. இதில், ஒரு தீவிரவாத அமைப்பிலிருந்து மற்ற தீவிரவாத
அமைப்புகளுக்கு கொடுக்கல்-வாங்கல் / பண்டம் மாற்று முறைகளும் உண்டு.
ராஜரத்னம் தடை செய்யப் பட்ட தமிழ் மறுவாழ்வு நிறுவனத்திற்கு [Tamil
Rehabilitation Organization (TRO)] $ 3.3 மில்லியன்கள் (ரூ. 165
கோடிகள்) மேலாகக் கொடுத்துள்ளதாக அமெரிக்கா கூறுகிறது. இது நவம்பர்
2007ல் தடை செய்யப்பட்டு, கணக்குகள் முடக்கப் பட்டன.

மின்னஞ்சலில் எனக்கு வந்த தகவல் இது...