Pages

Showing posts with label பேராண்மை. Show all posts
Showing posts with label பேராண்மை. Show all posts

Saturday, 17 October 2009

பேராண்மை திரைவிமர்சனம்....




கதை: நாயகன் ரவி பழங்குடி இனத்தை சேர்ந்தவர் காட்டில் தம் இனத்தாரோடு வாழ்கிறார். காடு இலாக்க ஆபிசரும் கூட அவருடைய மேலதிகாரி பொன்வண்ணன். அந்த காட்டிற்கு அருகில் தான் இந்திய விண்வெளி ஆராச்சி மாயம் இருக்கிறது, செயற்கைகோள் ஒன்று விண்ணில் செலுத்த ஆயுதம் ஆகி கொண்டுஇருக்கிறது. அந்த காட்டிற்கு கேம்ப்பிற்காக கல்லூரி மாணவிகள் வருகிறார்கள். இதில் ஐந்து பேர் ரவியை தாழ்த்தபட்டவர் என்பதால் ஆரம்பம்முதல் வெறுக்கிறார்கள் .. பின்னர் இவர்களையே காட்டிற்கு பயிற்சிக்காக ரவி அழைத்துசெல்கிறார்.. அங்கே அந்நிய கூலிப்படை ஒன்று செயற்கைகோள் தகர்க்க முன்னேறிக்கொண்டு இருக்கிறது... அதை எப்படி ரவி தகர்க்கிறார் என்பது தான் கதை..  
படத்திற்கு பெரிய பலமே S.R.சதீஷ் குமாரின் காமிராவும் ரவியின் நடிப்பும் தான், வித்யாசாகருக்கு பாடல்கள் ஏனோ கை கொடுக்கவில்லை, பின்னணி இசை நன்றாக இருக்கிறது.. 

முதல் பாதயில் தேவையற்ற இரட்டை அர்த்த வசனங்களும் , கவர்ச்சியும் முகத்தை சுளிக்க வைக்கிறது.. பொன்வண்ணன் பேசும் பாதி வசனத்தில் சென்சார் கட்.. 

இரண்டாம் பாதயில் சண்டை காட்சிகளும் அதை படம் பிடித்திற்கும் விதமும் அற்புதம்.. முதல் பாதயில் ஏற்பட்ட சலிப்பால் பிர்பாத்யில் ஏனோ படத்துடன் ஒன்ற முடியவில்லை.. வடிவேலு படத்திற்கு ஏன் என்று தெரியவில்லை..  

பேராண்மை விரசத்தை குறைத்திருந்தால் அனைவராலும் பாராட்டை பெற்றுஇருக்கும்...

Saturday, 10 October 2009

தீபாவளிக்கு வரும் படங்கள் ஒரு பார்வை...

இந்த தீபாவளிக்கு ரஜினி,அஜித்,விஜய் படங்கள் வராமல் இருப்பது அவர்களது ரசிகர்களுக்கு வருத்தமே... அதுவும் விஜயின் வேட்டைக்காரன் தீபாவளிக்கு வருமென்று எதிர்பார்த்து தள்ளிப்போனது அனைவர்க்கும் வருத்தமே....( அட நம்புங்க... )... சரி இந்த தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் ஆதவன், ஜக்குபாய், பேரான்மை , யோகி ஆகிய படங்களை பற்றி லேசாக அலசுவோம்....


ஆதவன் :
கமர்ஷியல் வெற்றி பட இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளி வர இருக்கும் படம்.. சூர்யா தொடர்ச்சியாக வெற்றிய தருவதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு கூடிஇருக்கிறது... பாடல்கள் ரசிக்கும் ரகம்... பெரிய தலைகளின் படங்கள் வராததால் படம் சுமாராக இருந்தாலே நல்ல ஓபனிங் கிடைக்க வாய்ப்பிருக்கிறது... வாழ்த்துக்கள் சூர்யா....


பேராண்மை :
ஜெனநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வெளி வர இருக்கும் படம்.. ஜெனநாதன் இயக்கத்தில் வெளிவந்த 'இயற்கை' மற்றும் 'ஈ' ரசிக்கும்படி இருந்ததால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம்... ரவி இப்படத்திற்காக சிரமபட்டுஇருக்கிறார் போலும் புகைபடங்களை பார்த்தல் தெரிகிறது.... பாடல்கள் ரசிக்கும்படி இல்லை... வெற்றி பெற வாழ்த்துக்கள்...
ஜக்குபாய்:  

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருந்த படம்.. எனோ காரணங்களுக்காக கைவிடப்பட்டது.. இப்பொழுது சரத் நடித்து வெளி வர இருக்கிறது... சமிபத்தில் பெரியவெற்றி இல்லாத சரத்திற்கு இந்த படம் கைகொடுக்கும் என நம்பலாம்....( ரஜினி படம் ஆயிற்றே...!)

யோகி:  
இயக்குனர் அமீர் நடிகராக உருவெடுத்திருக்கும் படம்... திருட திருடியை இயக்கிய சுப்ரமணிய சிவா இயக்கியுள்ளர்.. யுவனின் இசையில் பாடல்கள் அருமை... தனது இரண்டாவது படத்தில் சறுக்கிய சிவா இந்த படத்தில் வெற்றி பெறுவாரா பொறுத்திருந்து பார்க்கலாம்....