Pages

Friday 30 October 2009

கண்டேன் காதலை விமர்சனம்



கண்டேன் காதலை: சன் பிக்சரஸ் வெளியீட்டில், பரத் தமனா சந்தானம் நடித்து வெளி வந்திருக்கும் படம். 'ஜப் வி மேட்' இன் ரீமேக் என்பதனாலயே முதல் நாள் இந்த படத்தை பார்தேன். ஹிந்தியில் இருந்து சிறு மாற்றம் கூட செய்யவில்லை. ஹிந்தியில் பார்த்தவர்கள் இந்த படத்தை பார்ப்பதை தவிர்க்கவும்.

கதை: பரத், பெரிய தொழிலதிபரின் ஒரே மகன். காதல் தோல்வியில் வீட்டை விட்டு வந்து விடுகிறார். செய்வதறியாமல் ரெயிலில் ஏறுகிறார் அங்கே தமனாவை சந்திக்கிறார் .தமனா அவரிடம் வேரோருவரை காதலிபதாக சொல்கிறார். ஒரு சமயத்தில் தமான ரயிலை தவற விட அதற்கு உதவி செய்து thamanaa வுடன் தேனிக்கு செல்கிறார். அங்கே தமனாவுக்கு கல்யாண ஏர்பாடு செய்ய பரத்துடன் அவர் காதலரை சந்திக்க ஊட்டிக்கு செல்கிறார். அங்கே தமனாவின் காதலர் அவரை கைவிட... யாருடன் சேர்கிறார் எனபது தான் மீதி கதை...

தமனா ஆரம்பம் முதல் பேசி கொண்டே இருக்கிறார்.. ரசிக்க முடியவில்லை... பரத் பணக்கார வேடத்திற்கு பொருந்தவில்லை... படத்திற்கு பெரிய பலமே சந்தானம் தான்... அவர் வரும் சீன்கள் எல்லாமே செம ரகளை தியேட்டர் களை கட்டுகிறது... வித்யாசகர் இசையில் பாடல்கள் சுமார்..

படம் சுமார் தான்... ஒரு தடவை பார்க்கலாம்.....

Tuesday 20 October 2009

மத்திய மந்திரிக்கு மாத சம்பளம் ரூ. 16 ஆயிரம்!

மத்திய மந்திரிக்கு மாத சம்பளம் ரூ. 16 ஆயிரம்!
"அட, நம்மை விட குறைவான சம்பளம் வாங்குறாரே' என்று நீங்கள் அங்கலாய்த்தால், இனி படிக்க ஆரம்பியுங்கள்; முடிக்கும் போது கண்டிப்பாக உங்கள் எண்ணத்தில் லாரி மண் வந்து விழும்!



* மாத சம்பளம் 16 ஆயிரம் ரூபாய்.
* பார்லிமென்ட் கூட்டத்தொடர் இருக்கும் போது, தினப்படி ரூ. 1,000.
* தொகுதி அலவன்ஸ் மாதத்துக்கு 20,000 ரூபாய்.
*அலுவலக செலவுகளுக்கு மாதம் ரூ. 20,000 .
* அரசு பங்களாவில் புதிதாக மரச்சாமான்கள், மின் சாதன பொருட்கள் வாங்க கேபினட் அமைச்சருக்கு ரூ. 2.5 லட்சம்; இணை அமைச்சருக்கு ரூ. 2 லட்சம்.
* விமானத்தில் எக்சிகியூடிவ் சொகுசு இருக்கை அனுமதி; அமைச்சர், தன்னுடன் ஒரு செயலர் அல்லது உதவியாளரை அழைத்துச்செல்லலாம். தேவைப்பட்டால், வாடகை விமானம் எடுக்கலாம்.
* ரயிலில் விசேஷ சொகுசு, "சலூன்' பெட்டி வசதி கிடைக்கும். அப்படியில்லாவிட்டால், முதல் வகுப்பு "ஏசி' வசதி நிச்சயம். ஒரு உறவினர், இரு உதவியாளர், கணக்கில் அடங்கா லக்கேஜ் அனுமதி தாராளம்.
* பொதுமக்களை சந்திப்பதாக கூறியோ, பணி நிமித்தமாகவோ, அரசு செலவில் வாகனத்தில் செல்லலாம் எந்த நேரமும்.
* ஆண்டுக்கு 20 லட்சம் லிட்டர் குடிநீர் இலவசம்.
* ஆண்டுக்கு 50 ஆயிரம் யூனிட் மின்சாரம் இலவசம்.
* இரண்டு சாதா போன், ஒரு மொபைல் போன் இலவசம்; அவற்றின் மூலம் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் போன் அழைப்புகள் இலவசம்.
* மந்திரி, அவர் குடும்பத்தினருக்கு எங்கும் இலவச மருத்துவம் தான்.

நீங்க ஓட்டு போட்டீங்க... "அவிங்க' கலக்கறாங்ணா...

எனக்கு மின்-அஞ்சலில் வந்த செய்தி இது... பிடிச்சிருந்தா தமிழீஸ்சில் ஒட்டு போடுங்க

Saturday 17 October 2009

பேராண்மை திரைவிமர்சனம்....




கதை: நாயகன் ரவி பழங்குடி இனத்தை சேர்ந்தவர் காட்டில் தம் இனத்தாரோடு வாழ்கிறார். காடு இலாக்க ஆபிசரும் கூட அவருடைய மேலதிகாரி பொன்வண்ணன். அந்த காட்டிற்கு அருகில் தான் இந்திய விண்வெளி ஆராச்சி மாயம் இருக்கிறது, செயற்கைகோள் ஒன்று விண்ணில் செலுத்த ஆயுதம் ஆகி கொண்டுஇருக்கிறது. அந்த காட்டிற்கு கேம்ப்பிற்காக கல்லூரி மாணவிகள் வருகிறார்கள். இதில் ஐந்து பேர் ரவியை தாழ்த்தபட்டவர் என்பதால் ஆரம்பம்முதல் வெறுக்கிறார்கள் .. பின்னர் இவர்களையே காட்டிற்கு பயிற்சிக்காக ரவி அழைத்துசெல்கிறார்.. அங்கே அந்நிய கூலிப்படை ஒன்று செயற்கைகோள் தகர்க்க முன்னேறிக்கொண்டு இருக்கிறது... அதை எப்படி ரவி தகர்க்கிறார் என்பது தான் கதை..  
படத்திற்கு பெரிய பலமே S.R.சதீஷ் குமாரின் காமிராவும் ரவியின் நடிப்பும் தான், வித்யாசாகருக்கு பாடல்கள் ஏனோ கை கொடுக்கவில்லை, பின்னணி இசை நன்றாக இருக்கிறது.. 

முதல் பாதயில் தேவையற்ற இரட்டை அர்த்த வசனங்களும் , கவர்ச்சியும் முகத்தை சுளிக்க வைக்கிறது.. பொன்வண்ணன் பேசும் பாதி வசனத்தில் சென்சார் கட்.. 

இரண்டாம் பாதயில் சண்டை காட்சிகளும் அதை படம் பிடித்திற்கும் விதமும் அற்புதம்.. முதல் பாதயில் ஏற்பட்ட சலிப்பால் பிர்பாத்யில் ஏனோ படத்துடன் ஒன்ற முடியவில்லை.. வடிவேலு படத்திற்கு ஏன் என்று தெரியவில்லை..  

பேராண்மை விரசத்தை குறைத்திருந்தால் அனைவராலும் பாராட்டை பெற்றுஇருக்கும்...

Friday 16 October 2009

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்


அனைவருக்கும் இனிய தித்திக்கும் தீபஒளி திருநாள் வாழ்த்துக்கள்...

Thursday 15 October 2009

விஜயும் எஸ்.எம்.எஸ்சும்

கடந்த ஒன்று-இரண்டு வருடங்களாக கங்கூலியையும் சர்தாரையும் ஓரங்கட்டி விட்டார் நமது இளையதளபதி... நாள்தோறும் வரும் குருங்க்செய்திகளில் ஐயிந்தில் மூன்று விஜயை நக்கலடித்து தான் வருகின்றது.... அதில் இன்று மட்டும் எனக்கு வந்த சில எஸ்.எம்.எஸ்கள் கீழே...


விஜய்: நன் அடிச்சா தாங்க மாட்ட, நாலு நாட்கள் தூங்க மாட்ட.... 
மக்கள்: நீ அடிச்சா கூட பரவால, நீ நடிச்ச தான் தங்க முடியாது . 
விஜய்: ???!?  

சித்ரகுப்தன்: நீங்கள் இப்போதெல்லாம் மனிதர்களை கொள்வதே இல்லை ஆனாலும் மக்கள் சாகிறார்களே எப்படி?  
எமன்: பூலோகத்தில் இருக்கும் என் சிஷ்யன் "விஜய்" தான் காரணம்...  

முக்கிய செய்தி: பாகிஸ்தான் இன்னொரு முறை தாக்குதல் நடத்தினால் விமானத்தின் மூலமாக 'வேட்டைக்காரன்' பட CD களை வீசுவோம் என மன்மோகன்சிங் கடும் எச்சரிக்கை 

விஜயின் அடுத்த ஏலு படங்கள்:
1.வேட்டைக்காரன்  
2.சமையல்காரன் 
3.குடிக்காரன் 
4.பைத்தியக்காரன் 
5.பிச்சைக்காரன் 
6.சூனியக்காரன் 
7.குடுகுடுப்பைக்காரன்  

மேன்1: ஆனாலும் விஜய்க்கு இந்த நிலைமை வரக்குடாது  
மேன்2:என்ன ஆச்சு 
மேன்1:பேப்பர்ல "ரசிகர்கள் தேவை" அப்படினு விளம்பரம் கொடுத்திருக்கார்  

விஜய் ரசிகர்கள் மன்னிக்கவும்... இது வெறும் சிரிக்க மட்டுமே

Monday 12 October 2009

தென்னிந்திய நடிகர் சங்க போராட்டம் : வீடியோ

ரஜினி, விஜயகாந்த் ,சத்யராஜ், விவேக், சூர்யா பேச்சு அடங்கிய வீடியோ








Saturday 10 October 2009

தீபாவளிக்கு வரும் படங்கள் ஒரு பார்வை...

இந்த தீபாவளிக்கு ரஜினி,அஜித்,விஜய் படங்கள் வராமல் இருப்பது அவர்களது ரசிகர்களுக்கு வருத்தமே... அதுவும் விஜயின் வேட்டைக்காரன் தீபாவளிக்கு வருமென்று எதிர்பார்த்து தள்ளிப்போனது அனைவர்க்கும் வருத்தமே....( அட நம்புங்க... )... சரி இந்த தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் ஆதவன், ஜக்குபாய், பேரான்மை , யோகி ஆகிய படங்களை பற்றி லேசாக அலசுவோம்....


ஆதவன் :
கமர்ஷியல் வெற்றி பட இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளி வர இருக்கும் படம்.. சூர்யா தொடர்ச்சியாக வெற்றிய தருவதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு கூடிஇருக்கிறது... பாடல்கள் ரசிக்கும் ரகம்... பெரிய தலைகளின் படங்கள் வராததால் படம் சுமாராக இருந்தாலே நல்ல ஓபனிங் கிடைக்க வாய்ப்பிருக்கிறது... வாழ்த்துக்கள் சூர்யா....


பேராண்மை :
ஜெனநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வெளி வர இருக்கும் படம்.. ஜெனநாதன் இயக்கத்தில் வெளிவந்த 'இயற்கை' மற்றும் 'ஈ' ரசிக்கும்படி இருந்ததால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம்... ரவி இப்படத்திற்காக சிரமபட்டுஇருக்கிறார் போலும் புகைபடங்களை பார்த்தல் தெரிகிறது.... பாடல்கள் ரசிக்கும்படி இல்லை... வெற்றி பெற வாழ்த்துக்கள்...
ஜக்குபாய்:  

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருந்த படம்.. எனோ காரணங்களுக்காக கைவிடப்பட்டது.. இப்பொழுது சரத் நடித்து வெளி வர இருக்கிறது... சமிபத்தில் பெரியவெற்றி இல்லாத சரத்திற்கு இந்த படம் கைகொடுக்கும் என நம்பலாம்....( ரஜினி படம் ஆயிற்றே...!)

யோகி:  
இயக்குனர் அமீர் நடிகராக உருவெடுத்திருக்கும் படம்... திருட திருடியை இயக்கிய சுப்ரமணிய சிவா இயக்கியுள்ளர்.. யுவனின் இசையில் பாடல்கள் அருமை... தனது இரண்டாவது படத்தில் சறுக்கிய சிவா இந்த படத்தில் வெற்றி பெறுவாரா பொறுத்திருந்து பார்க்கலாம்....

Monday 5 October 2009

விஜயும் கவுண்டரும்...

எல்லா விசேஷத்துக்கும் டீ.வி பேட்டிக்கு முதல் ஆளா வந்து நிக்கறது நம்ம இளைய தளபதி தான். அவரையே இன்னைக்கு நம்ம நிகழ்ச்சிக்கும் தீபாவளி சிறப்பு விருந்தினரா கூப்பிட்டுருக்கோம். அவரும் வழக்கம் போல வர ஒத்துக்கிட்டாரு. 
சரி இனி நிகழ்ச்சிக்கு போவோம்.  

க: வாப்பா விஜய். ஆரம்பத்துல நீ நடிச்ச கேவலமான படத்தை பார்த்துட்டு நீ இவ்வளவு பெரிய ஆளா வருவனு நான் நினைக்கவேயில்லப்பா... 

வி: அண்ணா. என்னங்கணா இப்படி சொல்லிட்டீங்க? நான் நடிச்ச எல்லா படமுமே சூப்பர் ஹிட் தானுங்கணா.  

க: ஏனுங்க தம்பி இந்த நாளைய தீர்ப்பு, செல்வா, தேவா, விஷ்ணு, சந்திரலேகா, மாண்புமிகு மாணவன், வசந்த வாசல், ராஜாவின் பார்வையிலே இந்த படத்தையெல்லாம் நீங்க தியேட்டர்ல போய் பார்த்துருக்கீங்களா தம்பி? 

வி: அண்ணா. நானும் என் ஃபிரெண்ட்ஸும் இந்த படத்தை எல்லாம் தியேட்டர்ல போய் பாத்தோங்கணா.  

க: தெரியும். எவனும் வர மாட்டாங்கர தைரியத்துல போய் பார்த்துருப்பீங்க. உங்க கெட்ட நேரம் எவனாவது தப்பி தவறி தியேட்டர் பக்கம் ஒதுங்கியிருந்தானா உங்களுக்கெல்லாம் அப்படியே பொதுமாத்துதான்டீ...  

வி: என்னங்கணா இப்படி சொல்லிட்டீங்க. ராஜாவின் பார்வையிலே நானும் அஜித்தும் சேர்ந்து நடிச்சத பார்த்து எங்க ரெண்டு பேர் ரசிகர்களும் தொடர்ந்து பாராட்டிக்கிட்டு இருக்காங்க. 

க: ஓ! அந்த படத்துல அந்த கொடுமையெல்லாம் வேற இருக்கா? நல்ல வேளை நான் பார்க்கல.அது சரி அந்த ரசிகன் படத்துல ஹீரோயினோட அம்மாவுக்கு சோப்பு போடற சீன் யாரோட சிந்தனைல வந்துச்சுப்பா? 

வி: அது எங்க அப்பாவோட சிந்தனைதானுங்கணா. அந்த படம் ஹிட்டானது அதுவும் ஒரு முக்கிய காரணம்.  

க: டேய்! கேவலமா இப்படி ஒரு சீன் வெச்சிட்டு இதுல உங்களுக்கு பெருமை வேற. உன் வாழ்க்கையிலே நீ பண்ண ஒரு நல்ல விஷயம் என்ன தெரியுமா?  

வி: என்னங்கணா? 

க: உங்க அப்பா டைரக்ஷன்ல நடிக்கறத நிறுத்தனதுதான்...  

வி: இதையே தானுங்கணா எங்க அம்மாவும் சொன்னாங்க.  

க: உங்க அம்மா பேச்ச கேளு. அப்பறம் கேப்டன் கூட ஒரு படம் நடிச்சையே அது என்ன படம்பா?  

வி: அப்படிங்களா? நியாபகம் இல்லையே! (விஜய் தீவிரமாக சிந்திக்கிறார்) க: அதாம்பா அந்த யுவராணியோட கபடி ஆடுனியே!  

வி: ஓ! நம்ம செந்தூரப்பாண்டி  

க: அடப்பாவி. கேப்டனோட நடிச்ச படம்னா நியாபகம் இல்லை யுவராணியோட நடிச்ச படம்னா அடுத்த நிமிஷமே அடிக்கறியே... 

வி: அதெல்லாம் மறக்கமுடியுமாங்கணா... அதெல்லாம் ஒரு பொற்காலம்னா. இன்னும் கண்ணுலயே இருக்கு. அப்பறம் இந்த பூவே உனக்காக வந்ததுக்கப்பறம் வாழ்க்கையே மாறிடுச்சிங்கணா.  

க: நீ ஒழுங்கா நடிச்ச முதல் படமே அதுதான். வி: ஆமாங்கணா. அதுக்கப்பறம் வந்த எல்லா படமும் பயங்கர ஹிட்...  

க: டேய்! சும்மா அடிச்சு விடாதடா. எல்லாமே லிஸ்ட்ல இருக்கு. இங்க அவனவனுக்கு தூக்கமே வர மாட்டீங்குது உனக்கு மட்டும் எப்படிடா கனவுல கண்ட இடத்துல எல்லாம் மச்சம் இருக்குற மாதிரி பொண்ணு வருது? 

வி: ஏனுங்கணா, உங்க வயசுக்கு எப்படினா அதெல்லாம் வரும்? எங்கள மாதிரி யூத்துக்கு தானுங்க அதெல்லாம் வரும்... (சொல்லிவிட்டு நக்கலாக சிரிக்கிறார்) இதை கேட்டு கவுண்டர் ஜெர்க்காகிறார்... (மனதிற்குள் நினைத்து கொள்கிறார் : உனக்கு இருக்குடி)  

க: அது சரி... இந்த ஷாஜஹானு ஒரு படம் நடிச்சியே. அதுல எதுக்குடா வேற படத்து ஃப்ளாஷ் பேக்கை எடுத்து வைச்ச?  

வி: இல்லைங்களே! அது அந்த படத்து ஃப்ளேஷ் பேக் தானே? ஆனா படத்த பார்த்த எல்லாருக்குமே இப்படி ஒரு டவுட் இருந்துச்சாம். எனக்கு என்னனே இன்னைக்கு வரைக்கும் புரியல  

க: அது சரி... அது என்னடா புறாவுக்கு பெல்லடிக்கிறது? 

வி: அதுங்களாணா? நம்ம படையப்பால வர பாம்பு புத்துல கை விடற டயலாக்கு இக்வளா இருக்கனும்னு யோசிச்சி வெச்சதுங்கணா.  

க: ஏன்டா அடுத்தவனை பார்த்து காப்பி அடிக்கறீங்க? உங்களுக்குனு ஒரு ஸ்டைல வெச்சிக்கோங்கடா. அப்ப தான் வாழ்க்கையில பெரிய ஆளாக முடியும். அப்பறம் அந்த பகவதினு ஒரு படம் நடிச்சியே. அத கதை கேட்டு தான் நடிச்சியா?  


வி: அது பாட்ஷா மாதிரி இருக்கும்னு எங்க அப்பா சொன்னாரு. அதனாலதான் கதை கேக்காமலே நடிச்சேங்கணா. 

க: இனிமே நான் சொல்றேன். உங்க அப்பா பேச்சை கேக்காத. அப்பறம் உன்னை யாராலும் காப்பாத்த முடியாது...  

க: ஏன்டா தமிழன் தமிழன்னு ஒரு படம் நடிச்சியே அது கதை கேட்டு தான் நடிச்சியா?  

வி: டைரக்டர் ரெண்டே வரில எனக்கு கதை சொன்னாருணா... ஒரு தறுதலை தபால் தலையில் வருகிறான். இது தான்ணா அதோட கதை. 

க: டேய் ரெண்டு வரில சொல்றதுக்கு அது என்னடா திருக்குறளா? கதை கேக்கறதுக்கு ஒனக்கு ஒரு மணி நேரமாகுமாடா? காசு போடறது எவனோ, படம் பாக்கறது எவனோங்கற தைரியத்துல நீ நடிச்சிட்டு இருக்க. யூத்னு ஒரு படம் நடிச்சியே அது நியாபகம் இருக்கா? 

வி: அது மறக்கக்கூடிய படமாணா? ஆல் தோட்ட பூபதி பாட்டுக்கு தமிழ் நாடே ஆடுச்சேணா...  

க: அது உன் ஆட்டத்துக்கு இல்லடி. சிம்ரன் ஆடனதால தமிழ் நாடே ஆடுச்சு. அதுல எதுக்குடா உனக்கு வெக்க வேண்டிய பேரை விவேக்குக்கு வெச்சிங்க? வி: அது என்ன பேருங்கணா? நியாபகம் இல்லையே!!! 

க: கருத்து கந்தசாமி. படம் முழுக்க கருத்து சொல்லியே மக்கள கொன்னுட்டனு உன் பேருல பொது நல வழக்கு வேற இன்னும் இருக்காம். வி: அண்ணா என்னங்கணா இதுக்கெல்லாம் போயி டென்ஷனாகிட்டு.  

க: இதெல்லாம் விட இன்னோரு கொடுமை அந்த புதிய கீதை. அதுல உனக்கு எதுக்குடா ஆறு விரல்? 

வி: கமல், விக்ரம், சூர்யா மாதிரி ஏதாவது வித்யாசமான கெட்டப்ல வரணும்னு ஆசைப்பட்டேண்ணா. அதனால தான் ஆறு விரல் வெச்சிக்கிட்டேன். உங்களால என்னை அடையாளம் கண்டு பிடிச்சிருக்கவே முடியாதே!!! 

க:டேய்!!! கைல ஒரு விரல் அதிகமா வெச்சிக்கிட்டா அடையாளம் தெரியாதா? உன்னைய என்ன பண்றதுன்னே தெரியலையே. அதுல க்ளைமாக்ஸ் அதுக்கு மேல கொடுமை. வண்டில சைட் ஸ்டேண்ட் தட்டிவிட்டு ஆக்ஸிடெண்ட் ஆன ஒரே ஆள் நீதான்டா. 

வி: என்னங்கணா இப்படி திட்றீங்க. நீங்க ரொம்ப மோசம்.  

க: டேய் விஜய் மண்டையா! உன்னைய நம்பி காசு கொடுத்து தைரியமா வந்தா நீ இப்படி புதுமை பண்றேனு டகாட்டி வேலை பண்ணா உன்னைய என்ன பண்றது? நீயே சொல்லு அந்த திருமலை படமெல்லாம் மனுசன் பார்க்க முடியுமா? அதுல கடைசி சீன்ல நீ பேசற பஞ்ச் டயலாக் கொடுமை தாங்காம வில்லனே திருந்திடறான். நாங்க பாவம் என்ன பண்ணுவோம்? 

வி: !@#$% 

க: சரி.. கில்லி படத்துல எப்படிடா மதுரைல செமி ஃபைனல்ல தோத்துட்டு ஃபைனல்ல சென்னைல பஞ்சாப் டீம் கூட ஆடறீங்க? (விஜய் தீவிரமாக சிந்திக்கிறார்)  

க: சொல்லு மேன்!  

வி: அது வேற மேட்சுங்கணா. அதுல லோக்கல் டீமோட கில்லி டீம் ஆடுதுண்ணா. இது தமிழ்நாடுக்காக கலந்துக்கற மேட்ச்ணா. (ஒரு வழியாக சமாளிக்கிறார் விஜய்)

க: டேய் டக்கால்டி மண்டையா. தமிழ் நாடு டீம்ல தான் ஓட்டேரி நரி, டுமீல் குப்பம் வவ்வாலு, ஆதி வாசி எல்லாம் இருக்கறாங்களாடா? சும்மா அடிச்சு விடாதடா. 

வி: போங்கணா. என் படத்துல போய் லாஜிக் எல்லாம் பாக்கறீங்க. 

க: அது சரி. கில்லி கூட பரவால. அந்த மதுரனு ஒரு படம் நடிச்சியே அது மனசன் பாப்பானாடா? மீசைய ட்ரிம் பண்ணி கைல டேட்டு கூத்துனா அடையாளம் தெரியாதுனு தமிழ் நாட்டுக்கு புது டெக்னிக் சொல்லி கொடுத்ததே நீ தான்டா. 

வி: ??????? க: அது எப்படிடா தைரியமா அந்த பேரரசு படத்துல எல்லாம் நடிச்ச?  

வி: அண்ணா. அவர் எவ்வளவு பெரிய டைரக்டரு. அவர மாதிரி புதுசா சிந்திக்கிற டைரக்டரே தமிழ்நாட்ல கிடையாதுங்கணா.  

க: டேய் அவன் போன வாரம் தான் துவைச்சு காயப்போட்டேன். இந்த மூஞ்சில சந்தனத்த பூசினா அடையாளம் தெரியாதுனுங்கறதெல்லாம் பெரிய சிந்தனையாடா. அவனை சொல்லக்கூடாது. முதல்ல உங்கள போட்டு நாலு சாத்து சாத்தனா சரியா போயிடும். இனிமே அவன் கூட சேராத. புரியுதா?  

வி: சரிங்கண்ணா. க: அப்பறம் குஷி படத்துல எதுக்கு ரெண்டு தடவை நடிச்ச?  

வி: இல்லைங்களேணா. ஒரு தடவை தானே நடிச்சேன்.  

க: நான் சொல்றது சச்சின்னு ரெண்டாவது தடவை அதே கதைல நடிச்சியே அதை சொல்றேன்.  

வி: ஓ! குஷி படத்துலயும் சச்சின் படத்துலயும் ஒரே கதையாணா? அது எனக்கு தெரியாதே!  

க: அடங்கொக்கா மக்கா. நீ நடிக்கிற படத்து கத உனக்கே தெரியாதா? ஒழுங்கா கதைய கேட்டு நடி. உன்னைய நம்பி காசு கொடுத்து வந்து அடிக்கடி எல்லாரும் ஏமாந்து போறோம். அப்பறம் இன்னோரு விஷயம் தெலுகு படம் பாக்கறத குறைச்சிக்கோ. நம்ம ஊர்லயே நல்ல டைரக்டருங்க எல்லாம் அருமையான கதையோட இருக்காங்க. நீ ஒழுங்க கதை கேட்டு நடி. அப்பறம் பஞ்ச் டயலாக் பேசறத இன்னையோட நிறுத்திடு. ஓகேவா? 

வி: சரிங்கண்ணா... இனிமே ஒழுங்கா நடிக்கிறேன்னா... அப்படியே எல்லாருக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள். இனிமே உங்களை ஏமாத்தாம ஒழுங்கா கதை கேட்டு நடிக்கிறேங்க. 
வாழ்க்கைங்கறது ஒரு வட்டம் அதுல கீழ இருக்கறவன் மேல வருவான் மேல இருக்கவன் கீழ போவான். என்னோட கடைசி மூணு படம் ஃப்ளாப் ஆயிடுச்சினு வேட்டைக்காரண மிஸ் பண்ணிடாதீங்க...  

க: டேய். இப்பதான சொன்னேன். இனிமே நீ மட்டும் பஞ்ச் டயலாக் பேசின உன் காத புடிச்சி கடிச்சி வெச்சிடுவேன். ஒழுங்கா ஓடி போயிடு...  

கவுண்டர் துரத்த... விஜய் எஸ்கேப் ஆகிறார்.....

Saturday 3 October 2009

திரு திரு துறு துறு விமர்சனம்

இந்த படம் போன வாரமே மத்த ஊர்கள்ல ரிலீஸ் ஆய்டிச்சு.. ஆனா திருச்சி-ல நேத்துதான் ரிலீஸ் ஆணிச்சு... சரி அதவிடுங்க படத்த பத்தி பாப்போம்.. 

படத்துக்கு போனது 10 நிமிஷம் லேட் , நண்பர்கள திட்டிக்கிட்டே படம் பார்க்க ஆரம்பிச்சேன் .. படம் ஜாலியா தான் போகுது... நிறைய இடத்துல நல்ல டைமிங் காமெடி.. படத்துல அஜ்மல், ரூபா, மௌலி நல்லா நடிச்சிருக்காங்க ... படத்துல வர்ற அந்த குழந்தை ரொம்ப அழகா இருக்கு... படத்தோட கதைய சொல்ல விரும்பல... நீங்க போய் பாருங்க நிச்சியம் என்ஜாய் பண்ணுவிங்க .
 
எனக்கு இந்த படம் முடியிற வரைக்கும் ஒரு லேடி டைரக்ட் பண்ணதுன்னு தெரியாது.. நல்ல பண்ணிருக்காங்க ... போன மாசம் பார்த்த எத்தனையோ மொக்க படங்களுக்கு மத்தியில்...(கந்தசாமி, நினைத்தாலே இன்னிக்கும்) ...
 
இந்த படத்த கண்டிப்பா ஒரு தடவ பாக்கலாம்...

சமீபத்தில் ரசித்த கவிதை.....

என்னவரம் வேண்டும் என்றார் கடவுள்... 
அதுக்கூட தெரியாத நீர் என்ன கடவுள்??????


முதல் பதிவு

என்னுடைய முதல் பதிவு இது... கடந்த மூன்று மாதங்களாக தான் நான் தமிழ் ப்ளொகுகளை படித்து வருகின்றேன்... இதில் நான் படித்தவரை என்னை மிகவும் கவர்ந்தவர்கள்
# பார்த்ததும் படித்ததும் 
# "சாத்தான்"குளத்து வேதம்
# Cable சங்கர்
# IdlyVadai - இட்லிவடை
# OPEN HEART 
# Pappu
# SShathiesh
# Ultimate Star 'Ajith Kumar'
# அடிக்கடி...
# அதிஷாவின் 
# உருப்படாதது
# என் உயிரே...!
# என் பக்கங்கள் -சுரேஷ்
# ஒண்ணுமில்லை.....ச்சும்மா
# கனவுகளின் காதலன்
# கனவுகளே.., 
# கரையோரக் கனவுகள்
# குசும்பு 
# குமரன் குடில்
# கேளுங்க...கேளுங்க...கேட்டுக...
# சிநேகிதன் 
# ஜோக்கிரி 
# தமிழா...தமிழா.. 
# தமிழிஷ் 
# தீராத பக்கங்கள்
# பிச்சைப்பாத்திரம்
# பிரியமுடன்......வசந்த் 
# பொன்னியின் செல்வன்
# மனம் 
# யுவகிருஷ்ணா
# வால் பையன்
# வாழ்க்கை வாழ்வதற்கே...  
எவ்வளவு நாட்களுக்குத்தான் வெறும் படித்து கொண்டே இருப்பது.... நாமளும் எதாச்சும் எழுதலாமேன்னு தான் இந்த ப்ளொக்-அ எழுதிருக்கேன்.. தப்பா எடுத்துகாதிங்க எனக்கு தெரிஞ்ச விசயத்த உங்கக்கூட பகிரிந்துக்கத்தான் இந்த பதிவு..... என்னோட முதல் பதிவுங்குரதுனால சரியாய் எழுத வரல... போக போக சரியாயிடும்னு நினைக்குறேன் பார்க்கலாம்......