
கதை: நாயகன் ரவி பழங்குடி இனத்தை சேர்ந்தவர் காட்டில் தம் இனத்தாரோடு வாழ்கிறார். காடு இலாக்க ஆபிசரும் கூட அவருடைய மேலதிகாரி பொன்வண்ணன். அந்த காட்டிற்கு அருகில் தான் இந்திய விண்வெளி ஆராச்சி மாயம் இருக்கிறது, செயற்கைகோள் ஒன்று விண்ணில் செலுத்த ஆயுதம் ஆகி கொண்டுஇருக்கிறது. அந்த காட்டிற்கு கேம்ப்பிற்காக கல்லூரி மாணவிகள் வருகிறார்கள். இதில் ஐந்து பேர் ரவியை தாழ்த்தபட்டவர் என்பதால் ஆரம்பம்முதல் வெறுக்கிறார்கள் .. பின்னர் இவர்களையே காட்டிற்கு பயிற்சிக்காக ரவி அழைத்துசெல்கிறார்.. அங்கே அந்நிய கூலிப்படை ஒன்று செயற்கைகோள் தகர்க்க முன்னேறிக்கொண்டு இருக்கிறது... அதை எப்படி ரவி தகர்க்கிறார் என்பது தான் கதை..

படத்திற்கு பெரிய பலமே S.R.சதீஷ் குமாரின் காமிராவும் ரவியின் நடிப்பும் தான், வித்யாசாகருக்கு பாடல்கள் ஏனோ கை கொடுக்கவில்லை, பின்னணி இசை நன்றாக இருக்கிறது..
முதல் பாதயில் தேவையற்ற இரட்டை அர்த்த வசனங்களும் , கவர்ச்சியும் முகத்தை சுளிக்க வைக்கிறது.. பொன்வண்ணன் பேசும் பாதி வசனத்தில் சென்சார் கட்..
இரண்டாம் பாதயில் சண்டை காட்சிகளும் அதை படம் பிடித்திற்கும் விதமும் அற்புதம்.. முதல் பாதயில் ஏற்பட்ட சலிப்பால் பிர்பாத்யில் ஏனோ படத்துடன் ஒன்ற முடியவில்லை.. வடிவேலு படத்திற்கு ஏன் என்று தெரியவில்லை..
பேராண்மை விரசத்தை குறைத்திருந்தால் அனைவராலும் பாராட்டை பெற்றுஇருக்கும்...
No comments:
Post a Comment