Pages

Friday, 30 October 2009

கண்டேன் காதலை விமர்சனம்



கண்டேன் காதலை: சன் பிக்சரஸ் வெளியீட்டில், பரத் தமனா சந்தானம் நடித்து வெளி வந்திருக்கும் படம். 'ஜப் வி மேட்' இன் ரீமேக் என்பதனாலயே முதல் நாள் இந்த படத்தை பார்தேன். ஹிந்தியில் இருந்து சிறு மாற்றம் கூட செய்யவில்லை. ஹிந்தியில் பார்த்தவர்கள் இந்த படத்தை பார்ப்பதை தவிர்க்கவும்.

கதை: பரத், பெரிய தொழிலதிபரின் ஒரே மகன். காதல் தோல்வியில் வீட்டை விட்டு வந்து விடுகிறார். செய்வதறியாமல் ரெயிலில் ஏறுகிறார் அங்கே தமனாவை சந்திக்கிறார் .தமனா அவரிடம் வேரோருவரை காதலிபதாக சொல்கிறார். ஒரு சமயத்தில் தமான ரயிலை தவற விட அதற்கு உதவி செய்து thamanaa வுடன் தேனிக்கு செல்கிறார். அங்கே தமனாவுக்கு கல்யாண ஏர்பாடு செய்ய பரத்துடன் அவர் காதலரை சந்திக்க ஊட்டிக்கு செல்கிறார். அங்கே தமனாவின் காதலர் அவரை கைவிட... யாருடன் சேர்கிறார் எனபது தான் மீதி கதை...

தமனா ஆரம்பம் முதல் பேசி கொண்டே இருக்கிறார்.. ரசிக்க முடியவில்லை... பரத் பணக்கார வேடத்திற்கு பொருந்தவில்லை... படத்திற்கு பெரிய பலமே சந்தானம் தான்... அவர் வரும் சீன்கள் எல்லாமே செம ரகளை தியேட்டர் களை கட்டுகிறது... வித்யாசகர் இசையில் பாடல்கள் சுமார்..

படம் சுமார் தான்... ஒரு தடவை பார்க்கலாம்.....

Tuesday, 20 October 2009

மத்திய மந்திரிக்கு மாத சம்பளம் ரூ. 16 ஆயிரம்!

மத்திய மந்திரிக்கு மாத சம்பளம் ரூ. 16 ஆயிரம்!
"அட, நம்மை விட குறைவான சம்பளம் வாங்குறாரே' என்று நீங்கள் அங்கலாய்த்தால், இனி படிக்க ஆரம்பியுங்கள்; முடிக்கும் போது கண்டிப்பாக உங்கள் எண்ணத்தில் லாரி மண் வந்து விழும்!



* மாத சம்பளம் 16 ஆயிரம் ரூபாய்.
* பார்லிமென்ட் கூட்டத்தொடர் இருக்கும் போது, தினப்படி ரூ. 1,000.
* தொகுதி அலவன்ஸ் மாதத்துக்கு 20,000 ரூபாய்.
*அலுவலக செலவுகளுக்கு மாதம் ரூ. 20,000 .
* அரசு பங்களாவில் புதிதாக மரச்சாமான்கள், மின் சாதன பொருட்கள் வாங்க கேபினட் அமைச்சருக்கு ரூ. 2.5 லட்சம்; இணை அமைச்சருக்கு ரூ. 2 லட்சம்.
* விமானத்தில் எக்சிகியூடிவ் சொகுசு இருக்கை அனுமதி; அமைச்சர், தன்னுடன் ஒரு செயலர் அல்லது உதவியாளரை அழைத்துச்செல்லலாம். தேவைப்பட்டால், வாடகை விமானம் எடுக்கலாம்.
* ரயிலில் விசேஷ சொகுசு, "சலூன்' பெட்டி வசதி கிடைக்கும். அப்படியில்லாவிட்டால், முதல் வகுப்பு "ஏசி' வசதி நிச்சயம். ஒரு உறவினர், இரு உதவியாளர், கணக்கில் அடங்கா லக்கேஜ் அனுமதி தாராளம்.
* பொதுமக்களை சந்திப்பதாக கூறியோ, பணி நிமித்தமாகவோ, அரசு செலவில் வாகனத்தில் செல்லலாம் எந்த நேரமும்.
* ஆண்டுக்கு 20 லட்சம் லிட்டர் குடிநீர் இலவசம்.
* ஆண்டுக்கு 50 ஆயிரம் யூனிட் மின்சாரம் இலவசம்.
* இரண்டு சாதா போன், ஒரு மொபைல் போன் இலவசம்; அவற்றின் மூலம் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் போன் அழைப்புகள் இலவசம்.
* மந்திரி, அவர் குடும்பத்தினருக்கு எங்கும் இலவச மருத்துவம் தான்.

நீங்க ஓட்டு போட்டீங்க... "அவிங்க' கலக்கறாங்ணா...

எனக்கு மின்-அஞ்சலில் வந்த செய்தி இது... பிடிச்சிருந்தா தமிழீஸ்சில் ஒட்டு போடுங்க

Saturday, 17 October 2009

பேராண்மை திரைவிமர்சனம்....




கதை: நாயகன் ரவி பழங்குடி இனத்தை சேர்ந்தவர் காட்டில் தம் இனத்தாரோடு வாழ்கிறார். காடு இலாக்க ஆபிசரும் கூட அவருடைய மேலதிகாரி பொன்வண்ணன். அந்த காட்டிற்கு அருகில் தான் இந்திய விண்வெளி ஆராச்சி மாயம் இருக்கிறது, செயற்கைகோள் ஒன்று விண்ணில் செலுத்த ஆயுதம் ஆகி கொண்டுஇருக்கிறது. அந்த காட்டிற்கு கேம்ப்பிற்காக கல்லூரி மாணவிகள் வருகிறார்கள். இதில் ஐந்து பேர் ரவியை தாழ்த்தபட்டவர் என்பதால் ஆரம்பம்முதல் வெறுக்கிறார்கள் .. பின்னர் இவர்களையே காட்டிற்கு பயிற்சிக்காக ரவி அழைத்துசெல்கிறார்.. அங்கே அந்நிய கூலிப்படை ஒன்று செயற்கைகோள் தகர்க்க முன்னேறிக்கொண்டு இருக்கிறது... அதை எப்படி ரவி தகர்க்கிறார் என்பது தான் கதை..  
படத்திற்கு பெரிய பலமே S.R.சதீஷ் குமாரின் காமிராவும் ரவியின் நடிப்பும் தான், வித்யாசாகருக்கு பாடல்கள் ஏனோ கை கொடுக்கவில்லை, பின்னணி இசை நன்றாக இருக்கிறது.. 

முதல் பாதயில் தேவையற்ற இரட்டை அர்த்த வசனங்களும் , கவர்ச்சியும் முகத்தை சுளிக்க வைக்கிறது.. பொன்வண்ணன் பேசும் பாதி வசனத்தில் சென்சார் கட்.. 

இரண்டாம் பாதயில் சண்டை காட்சிகளும் அதை படம் பிடித்திற்கும் விதமும் அற்புதம்.. முதல் பாதயில் ஏற்பட்ட சலிப்பால் பிர்பாத்யில் ஏனோ படத்துடன் ஒன்ற முடியவில்லை.. வடிவேலு படத்திற்கு ஏன் என்று தெரியவில்லை..  

பேராண்மை விரசத்தை குறைத்திருந்தால் அனைவராலும் பாராட்டை பெற்றுஇருக்கும்...

Friday, 16 October 2009

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்


அனைவருக்கும் இனிய தித்திக்கும் தீபஒளி திருநாள் வாழ்த்துக்கள்...