Pages

Tuesday 20 October 2009

மத்திய மந்திரிக்கு மாத சம்பளம் ரூ. 16 ஆயிரம்!

மத்திய மந்திரிக்கு மாத சம்பளம் ரூ. 16 ஆயிரம்!
"அட, நம்மை விட குறைவான சம்பளம் வாங்குறாரே' என்று நீங்கள் அங்கலாய்த்தால், இனி படிக்க ஆரம்பியுங்கள்; முடிக்கும் போது கண்டிப்பாக உங்கள் எண்ணத்தில் லாரி மண் வந்து விழும்!



* மாத சம்பளம் 16 ஆயிரம் ரூபாய்.
* பார்லிமென்ட் கூட்டத்தொடர் இருக்கும் போது, தினப்படி ரூ. 1,000.
* தொகுதி அலவன்ஸ் மாதத்துக்கு 20,000 ரூபாய்.
*அலுவலக செலவுகளுக்கு மாதம் ரூ. 20,000 .
* அரசு பங்களாவில் புதிதாக மரச்சாமான்கள், மின் சாதன பொருட்கள் வாங்க கேபினட் அமைச்சருக்கு ரூ. 2.5 லட்சம்; இணை அமைச்சருக்கு ரூ. 2 லட்சம்.
* விமானத்தில் எக்சிகியூடிவ் சொகுசு இருக்கை அனுமதி; அமைச்சர், தன்னுடன் ஒரு செயலர் அல்லது உதவியாளரை அழைத்துச்செல்லலாம். தேவைப்பட்டால், வாடகை விமானம் எடுக்கலாம்.
* ரயிலில் விசேஷ சொகுசு, "சலூன்' பெட்டி வசதி கிடைக்கும். அப்படியில்லாவிட்டால், முதல் வகுப்பு "ஏசி' வசதி நிச்சயம். ஒரு உறவினர், இரு உதவியாளர், கணக்கில் அடங்கா லக்கேஜ் அனுமதி தாராளம்.
* பொதுமக்களை சந்திப்பதாக கூறியோ, பணி நிமித்தமாகவோ, அரசு செலவில் வாகனத்தில் செல்லலாம் எந்த நேரமும்.
* ஆண்டுக்கு 20 லட்சம் லிட்டர் குடிநீர் இலவசம்.
* ஆண்டுக்கு 50 ஆயிரம் யூனிட் மின்சாரம் இலவசம்.
* இரண்டு சாதா போன், ஒரு மொபைல் போன் இலவசம்; அவற்றின் மூலம் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் போன் அழைப்புகள் இலவசம்.
* மந்திரி, அவர் குடும்பத்தினருக்கு எங்கும் இலவச மருத்துவம் தான்.

நீங்க ஓட்டு போட்டீங்க... "அவிங்க' கலக்கறாங்ணா...

எனக்கு மின்-அஞ்சலில் வந்த செய்தி இது... பிடிச்சிருந்தா தமிழீஸ்சில் ஒட்டு போடுங்க

No comments:

Post a Comment