Pages

Monday 5 October 2009

விஜயும் கவுண்டரும்...

எல்லா விசேஷத்துக்கும் டீ.வி பேட்டிக்கு முதல் ஆளா வந்து நிக்கறது நம்ம இளைய தளபதி தான். அவரையே இன்னைக்கு நம்ம நிகழ்ச்சிக்கும் தீபாவளி சிறப்பு விருந்தினரா கூப்பிட்டுருக்கோம். அவரும் வழக்கம் போல வர ஒத்துக்கிட்டாரு. 
சரி இனி நிகழ்ச்சிக்கு போவோம்.  

க: வாப்பா விஜய். ஆரம்பத்துல நீ நடிச்ச கேவலமான படத்தை பார்த்துட்டு நீ இவ்வளவு பெரிய ஆளா வருவனு நான் நினைக்கவேயில்லப்பா... 

வி: அண்ணா. என்னங்கணா இப்படி சொல்லிட்டீங்க? நான் நடிச்ச எல்லா படமுமே சூப்பர் ஹிட் தானுங்கணா.  

க: ஏனுங்க தம்பி இந்த நாளைய தீர்ப்பு, செல்வா, தேவா, விஷ்ணு, சந்திரலேகா, மாண்புமிகு மாணவன், வசந்த வாசல், ராஜாவின் பார்வையிலே இந்த படத்தையெல்லாம் நீங்க தியேட்டர்ல போய் பார்த்துருக்கீங்களா தம்பி? 

வி: அண்ணா. நானும் என் ஃபிரெண்ட்ஸும் இந்த படத்தை எல்லாம் தியேட்டர்ல போய் பாத்தோங்கணா.  

க: தெரியும். எவனும் வர மாட்டாங்கர தைரியத்துல போய் பார்த்துருப்பீங்க. உங்க கெட்ட நேரம் எவனாவது தப்பி தவறி தியேட்டர் பக்கம் ஒதுங்கியிருந்தானா உங்களுக்கெல்லாம் அப்படியே பொதுமாத்துதான்டீ...  

வி: என்னங்கணா இப்படி சொல்லிட்டீங்க. ராஜாவின் பார்வையிலே நானும் அஜித்தும் சேர்ந்து நடிச்சத பார்த்து எங்க ரெண்டு பேர் ரசிகர்களும் தொடர்ந்து பாராட்டிக்கிட்டு இருக்காங்க. 

க: ஓ! அந்த படத்துல அந்த கொடுமையெல்லாம் வேற இருக்கா? நல்ல வேளை நான் பார்க்கல.அது சரி அந்த ரசிகன் படத்துல ஹீரோயினோட அம்மாவுக்கு சோப்பு போடற சீன் யாரோட சிந்தனைல வந்துச்சுப்பா? 

வி: அது எங்க அப்பாவோட சிந்தனைதானுங்கணா. அந்த படம் ஹிட்டானது அதுவும் ஒரு முக்கிய காரணம்.  

க: டேய்! கேவலமா இப்படி ஒரு சீன் வெச்சிட்டு இதுல உங்களுக்கு பெருமை வேற. உன் வாழ்க்கையிலே நீ பண்ண ஒரு நல்ல விஷயம் என்ன தெரியுமா?  

வி: என்னங்கணா? 

க: உங்க அப்பா டைரக்ஷன்ல நடிக்கறத நிறுத்தனதுதான்...  

வி: இதையே தானுங்கணா எங்க அம்மாவும் சொன்னாங்க.  

க: உங்க அம்மா பேச்ச கேளு. அப்பறம் கேப்டன் கூட ஒரு படம் நடிச்சையே அது என்ன படம்பா?  

வி: அப்படிங்களா? நியாபகம் இல்லையே! (விஜய் தீவிரமாக சிந்திக்கிறார்) க: அதாம்பா அந்த யுவராணியோட கபடி ஆடுனியே!  

வி: ஓ! நம்ம செந்தூரப்பாண்டி  

க: அடப்பாவி. கேப்டனோட நடிச்ச படம்னா நியாபகம் இல்லை யுவராணியோட நடிச்ச படம்னா அடுத்த நிமிஷமே அடிக்கறியே... 

வி: அதெல்லாம் மறக்கமுடியுமாங்கணா... அதெல்லாம் ஒரு பொற்காலம்னா. இன்னும் கண்ணுலயே இருக்கு. அப்பறம் இந்த பூவே உனக்காக வந்ததுக்கப்பறம் வாழ்க்கையே மாறிடுச்சிங்கணா.  

க: நீ ஒழுங்கா நடிச்ச முதல் படமே அதுதான். வி: ஆமாங்கணா. அதுக்கப்பறம் வந்த எல்லா படமும் பயங்கர ஹிட்...  

க: டேய்! சும்மா அடிச்சு விடாதடா. எல்லாமே லிஸ்ட்ல இருக்கு. இங்க அவனவனுக்கு தூக்கமே வர மாட்டீங்குது உனக்கு மட்டும் எப்படிடா கனவுல கண்ட இடத்துல எல்லாம் மச்சம் இருக்குற மாதிரி பொண்ணு வருது? 

வி: ஏனுங்கணா, உங்க வயசுக்கு எப்படினா அதெல்லாம் வரும்? எங்கள மாதிரி யூத்துக்கு தானுங்க அதெல்லாம் வரும்... (சொல்லிவிட்டு நக்கலாக சிரிக்கிறார்) இதை கேட்டு கவுண்டர் ஜெர்க்காகிறார்... (மனதிற்குள் நினைத்து கொள்கிறார் : உனக்கு இருக்குடி)  

க: அது சரி... இந்த ஷாஜஹானு ஒரு படம் நடிச்சியே. அதுல எதுக்குடா வேற படத்து ஃப்ளாஷ் பேக்கை எடுத்து வைச்ச?  

வி: இல்லைங்களே! அது அந்த படத்து ஃப்ளேஷ் பேக் தானே? ஆனா படத்த பார்த்த எல்லாருக்குமே இப்படி ஒரு டவுட் இருந்துச்சாம். எனக்கு என்னனே இன்னைக்கு வரைக்கும் புரியல  

க: அது சரி... அது என்னடா புறாவுக்கு பெல்லடிக்கிறது? 

வி: அதுங்களாணா? நம்ம படையப்பால வர பாம்பு புத்துல கை விடற டயலாக்கு இக்வளா இருக்கனும்னு யோசிச்சி வெச்சதுங்கணா.  

க: ஏன்டா அடுத்தவனை பார்த்து காப்பி அடிக்கறீங்க? உங்களுக்குனு ஒரு ஸ்டைல வெச்சிக்கோங்கடா. அப்ப தான் வாழ்க்கையில பெரிய ஆளாக முடியும். அப்பறம் அந்த பகவதினு ஒரு படம் நடிச்சியே. அத கதை கேட்டு தான் நடிச்சியா?  


வி: அது பாட்ஷா மாதிரி இருக்கும்னு எங்க அப்பா சொன்னாரு. அதனாலதான் கதை கேக்காமலே நடிச்சேங்கணா. 

க: இனிமே நான் சொல்றேன். உங்க அப்பா பேச்சை கேக்காத. அப்பறம் உன்னை யாராலும் காப்பாத்த முடியாது...  

க: ஏன்டா தமிழன் தமிழன்னு ஒரு படம் நடிச்சியே அது கதை கேட்டு தான் நடிச்சியா?  

வி: டைரக்டர் ரெண்டே வரில எனக்கு கதை சொன்னாருணா... ஒரு தறுதலை தபால் தலையில் வருகிறான். இது தான்ணா அதோட கதை. 

க: டேய் ரெண்டு வரில சொல்றதுக்கு அது என்னடா திருக்குறளா? கதை கேக்கறதுக்கு ஒனக்கு ஒரு மணி நேரமாகுமாடா? காசு போடறது எவனோ, படம் பாக்கறது எவனோங்கற தைரியத்துல நீ நடிச்சிட்டு இருக்க. யூத்னு ஒரு படம் நடிச்சியே அது நியாபகம் இருக்கா? 

வி: அது மறக்கக்கூடிய படமாணா? ஆல் தோட்ட பூபதி பாட்டுக்கு தமிழ் நாடே ஆடுச்சேணா...  

க: அது உன் ஆட்டத்துக்கு இல்லடி. சிம்ரன் ஆடனதால தமிழ் நாடே ஆடுச்சு. அதுல எதுக்குடா உனக்கு வெக்க வேண்டிய பேரை விவேக்குக்கு வெச்சிங்க? வி: அது என்ன பேருங்கணா? நியாபகம் இல்லையே!!! 

க: கருத்து கந்தசாமி. படம் முழுக்க கருத்து சொல்லியே மக்கள கொன்னுட்டனு உன் பேருல பொது நல வழக்கு வேற இன்னும் இருக்காம். வி: அண்ணா என்னங்கணா இதுக்கெல்லாம் போயி டென்ஷனாகிட்டு.  

க: இதெல்லாம் விட இன்னோரு கொடுமை அந்த புதிய கீதை. அதுல உனக்கு எதுக்குடா ஆறு விரல்? 

வி: கமல், விக்ரம், சூர்யா மாதிரி ஏதாவது வித்யாசமான கெட்டப்ல வரணும்னு ஆசைப்பட்டேண்ணா. அதனால தான் ஆறு விரல் வெச்சிக்கிட்டேன். உங்களால என்னை அடையாளம் கண்டு பிடிச்சிருக்கவே முடியாதே!!! 

க:டேய்!!! கைல ஒரு விரல் அதிகமா வெச்சிக்கிட்டா அடையாளம் தெரியாதா? உன்னைய என்ன பண்றதுன்னே தெரியலையே. அதுல க்ளைமாக்ஸ் அதுக்கு மேல கொடுமை. வண்டில சைட் ஸ்டேண்ட் தட்டிவிட்டு ஆக்ஸிடெண்ட் ஆன ஒரே ஆள் நீதான்டா. 

வி: என்னங்கணா இப்படி திட்றீங்க. நீங்க ரொம்ப மோசம்.  

க: டேய் விஜய் மண்டையா! உன்னைய நம்பி காசு கொடுத்து தைரியமா வந்தா நீ இப்படி புதுமை பண்றேனு டகாட்டி வேலை பண்ணா உன்னைய என்ன பண்றது? நீயே சொல்லு அந்த திருமலை படமெல்லாம் மனுசன் பார்க்க முடியுமா? அதுல கடைசி சீன்ல நீ பேசற பஞ்ச் டயலாக் கொடுமை தாங்காம வில்லனே திருந்திடறான். நாங்க பாவம் என்ன பண்ணுவோம்? 

வி: !@#$% 

க: சரி.. கில்லி படத்துல எப்படிடா மதுரைல செமி ஃபைனல்ல தோத்துட்டு ஃபைனல்ல சென்னைல பஞ்சாப் டீம் கூட ஆடறீங்க? (விஜய் தீவிரமாக சிந்திக்கிறார்)  

க: சொல்லு மேன்!  

வி: அது வேற மேட்சுங்கணா. அதுல லோக்கல் டீமோட கில்லி டீம் ஆடுதுண்ணா. இது தமிழ்நாடுக்காக கலந்துக்கற மேட்ச்ணா. (ஒரு வழியாக சமாளிக்கிறார் விஜய்)

க: டேய் டக்கால்டி மண்டையா. தமிழ் நாடு டீம்ல தான் ஓட்டேரி நரி, டுமீல் குப்பம் வவ்வாலு, ஆதி வாசி எல்லாம் இருக்கறாங்களாடா? சும்மா அடிச்சு விடாதடா. 

வி: போங்கணா. என் படத்துல போய் லாஜிக் எல்லாம் பாக்கறீங்க. 

க: அது சரி. கில்லி கூட பரவால. அந்த மதுரனு ஒரு படம் நடிச்சியே அது மனசன் பாப்பானாடா? மீசைய ட்ரிம் பண்ணி கைல டேட்டு கூத்துனா அடையாளம் தெரியாதுனு தமிழ் நாட்டுக்கு புது டெக்னிக் சொல்லி கொடுத்ததே நீ தான்டா. 

வி: ??????? க: அது எப்படிடா தைரியமா அந்த பேரரசு படத்துல எல்லாம் நடிச்ச?  

வி: அண்ணா. அவர் எவ்வளவு பெரிய டைரக்டரு. அவர மாதிரி புதுசா சிந்திக்கிற டைரக்டரே தமிழ்நாட்ல கிடையாதுங்கணா.  

க: டேய் அவன் போன வாரம் தான் துவைச்சு காயப்போட்டேன். இந்த மூஞ்சில சந்தனத்த பூசினா அடையாளம் தெரியாதுனுங்கறதெல்லாம் பெரிய சிந்தனையாடா. அவனை சொல்லக்கூடாது. முதல்ல உங்கள போட்டு நாலு சாத்து சாத்தனா சரியா போயிடும். இனிமே அவன் கூட சேராத. புரியுதா?  

வி: சரிங்கண்ணா. க: அப்பறம் குஷி படத்துல எதுக்கு ரெண்டு தடவை நடிச்ச?  

வி: இல்லைங்களேணா. ஒரு தடவை தானே நடிச்சேன்.  

க: நான் சொல்றது சச்சின்னு ரெண்டாவது தடவை அதே கதைல நடிச்சியே அதை சொல்றேன்.  

வி: ஓ! குஷி படத்துலயும் சச்சின் படத்துலயும் ஒரே கதையாணா? அது எனக்கு தெரியாதே!  

க: அடங்கொக்கா மக்கா. நீ நடிக்கிற படத்து கத உனக்கே தெரியாதா? ஒழுங்கா கதைய கேட்டு நடி. உன்னைய நம்பி காசு கொடுத்து வந்து அடிக்கடி எல்லாரும் ஏமாந்து போறோம். அப்பறம் இன்னோரு விஷயம் தெலுகு படம் பாக்கறத குறைச்சிக்கோ. நம்ம ஊர்லயே நல்ல டைரக்டருங்க எல்லாம் அருமையான கதையோட இருக்காங்க. நீ ஒழுங்க கதை கேட்டு நடி. அப்பறம் பஞ்ச் டயலாக் பேசறத இன்னையோட நிறுத்திடு. ஓகேவா? 

வி: சரிங்கண்ணா... இனிமே ஒழுங்கா நடிக்கிறேன்னா... அப்படியே எல்லாருக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள். இனிமே உங்களை ஏமாத்தாம ஒழுங்கா கதை கேட்டு நடிக்கிறேங்க. 
வாழ்க்கைங்கறது ஒரு வட்டம் அதுல கீழ இருக்கறவன் மேல வருவான் மேல இருக்கவன் கீழ போவான். என்னோட கடைசி மூணு படம் ஃப்ளாப் ஆயிடுச்சினு வேட்டைக்காரண மிஸ் பண்ணிடாதீங்க...  

க: டேய். இப்பதான சொன்னேன். இனிமே நீ மட்டும் பஞ்ச் டயலாக் பேசின உன் காத புடிச்சி கடிச்சி வெச்சிடுவேன். ஒழுங்கா ஓடி போயிடு...  

கவுண்டர் துரத்த... விஜய் எஸ்கேப் ஆகிறார்.....

No comments:

Post a Comment